#1:
பனித்துளியின் ஈரம் நீ,
அதை விரட்டும் விடியலின் வெப்பமும் நீயே..
இப்படி முரணாக நிற்கும் உன்னை,
முழுதாக நேசிக்க ஆசை...
#2:
உனக்கு கவிதை பிடிக்கும் என அறிவேன்.
கவிதைக்கும் உன்னை பிடித்திருக்கிறது போலும்.
என் கற்பனை கதவை உடைக்கிறாள் ... உன்னை சந்திப்பதற்காக !
#3: உன் ஞாபகங்கள்
என் இதய துடிப்புகள் நடுவில் வசிக்கும் ... உன் ஞாபகங்கள்.
இரவில் தூக்கம் என்னை தழுவும் தருணத்தில்....உன் ஞாபகங்கள்.
எனக்கு பிடித்த பாடல்களை முணுமுணுக்கும் பொழுது ... உன் ஞாபகங்கள்.
மழைக்கு முன் வீசும் மண் வாசனை போல், என் மனதை வருடும் .... உன் ஞாபகங்கள்.
இப்படி உன் ஞாபகங்களை மட்டுமே சுவாசிக்கும் என்னை பார்த்து... உன்னை மறுத்துவிட்டேன் என்றாயே!!
எப்படி ????
#4:
நீ எழுத சொன்னதால் நான் கவிஞன் ஆவேனோ ?
நீ என்னை ரசிப்பதால் நன் கலைஞன் ஆவேனோ ?
என் ஆண்மையை நீ மதிப்பதால் நான் வீரன் ஆவேனோ ?
உன் மீது கொண்ட ஆசையால் நான் மிருகம் ஆவேனோ ?
என் மீது கொண்ட உன் பாசத்தால் நான் குழந்தை ஆவேனோ ?
உன் சிந்தனையில் வாழ்வதால் நான் பித்தன் ஆவேனோ ?
குழந்தை கையில் சிக்கிய களிமண் போல...
நான் என்ன ஆவேனோ ?
நீயே சொல்..
பெண்ணே !